Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிரம்பி வழியும் கண்மாய்கள்…. நடைபெற்ற மீன்பிடி திருவிழா…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!

கண்மாய்களில் மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாயாண்டிபட்டி அம்பட்டையன் கண்மாய், செட்டிகுறிச்சி உலகூரணி கண்மாய் ஆகிய கண்மாய்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில்  கண்மாய்களில்    மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவை கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு  தொடங்கி வைத்துள்ளனர்.இதனையடுத்து   பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கலந்து கொண்டு  சேலை, வேட்டி ஆகியவற்றை பயன்படுத்தி ஜிலேபி, விரால், கெண்டை, நெத்திலி உள்ளிட்ட பல வகையான மீன்களை பிடித்துள்ளனர். அதன்பின்னர் பிடித்த மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியாக தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

Categories

Tech |