தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதையடுத்து நேற்று வினாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 3 மடங்காக உயர்ந்து 6,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மதுராந்தகம் ஏரியில் இருந்து இன்று வினாடிக்கு 6,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மழை தொடர்ந்து பெய்து வந்தால் அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 8000 கன அடியாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.