Categories
உலக செய்திகள்

“நிரவ் மோடி இந்தியாவிற்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வார்”…? நிபுணர்கள் வெளியிட்ட தகவல்…!!!!

நிரவ் மோடி என்னும் வைர வியாபாரி ஒருவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பிஒடி உள்ளார். சிபிஐ அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக லண்டன் வேண்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். இந்த நிலையில் அவரை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் நிரவ் மோடி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான அபாயம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சிறையில் நிரவ் மோடி இடம் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட இரண்டு உளவியல் நிபுணர்கள் அவர் மன அழுத்தத்துடனும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடனும் இருப்பதாக கூறியுள்ளனர். அதேசமயம் இந்தியாவில் நிரவ் மோடிக்கான பாதுகாப்பு பற்றி இந்திய அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல் உறுதியளித்துள்ளார். நிரவ் மோடி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது தனிப்பட்ட நலனை காப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என அவரது வக்கீல் வாதிட்டுள்ளார். மேலும் இந்த வாரம் மூன்று நாட்கள் நடைபெறும் விசாரணைக்கு பின் நிரவ் மோடியை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி விடலாமா வேண்டாமா என்பது பற்றி நீதிபதிகள் குழு தீர்ப்பளிக்கின்றது.

Categories

Tech |