கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் சென்ற முதியவர் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி பனிக்குப்பத்தில் உள்ள கடலுார் திமுக எம்பி ரமேஷின் முந்திரி தொழிற்சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளர் திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜ், சக தொழிலாளிகள் வினோத், கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு எம் பி ரமேஷை தவிர மற்ற பிற ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களை விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து முக்கிய குற்றவாளியான திமுக எம்பி ரமேஷை தேடி வந்த நிலையில், தற்போது அவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு கற்பகவல்லி முன்பு சரணடைந்தார். அப்பொழுது அவர் “என் மீது சுமத்தப்பட்ட குற்றமானது ஆதாரமற்றது ஆகும். எனவே சட்டத்தின் முன் உரிய ஆதாரத்துடன் என்னை நிரூபித்து, நிரபராதியாக வெளியே வருவேன் ” என்று அறிக்கையை வெளியிட்டுள்ளார்.