3 நாள் பயணமாக குடும்பத்தினருடன் ஆந்திரமாநிலத்திற்கு வருகை புரிந்துள்ள மத்திய நிதி அமைச்சரான நிர்மலாசீதாராமன், நேற்று இரவு ஸ்ரீ பத்மாவதிதேவி கோவிலுக்கு சென்றார். இதையடுத்து 70 கி.மீ தொலைவில் சித்தூர் காணிப்பாக்கத்திலுள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகரை வழிபாடு செய்தார். திருப்பதியில் இரவு வேளையில் தங்கியிருந்த அவர் இன்று காலை ஏழுமலையானை வழிபட்டார்.
அவருக்கு தேவஸ்தான தலைவர் ஒய்.பி.சுப்பாரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி போன்றோர் வரவேற்பு அளித்தனர். இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக கடுமையான சரிவை சந்தித்து இருப்பதால் நிர்மலா திருப்பதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.