மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இவை அனைத்தும் வரவேற்கத்தக்கது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “குழந்தைகளுக்கான மருத்துவ வசதி சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உதவ முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் செலவு குறைவதுடன், வருமானம் அதிகரிக்கும். சிறுதொழில் முனைவோர், தொழில் புரிவோர், சுற்றுலாத் துறையினர் என பல தரப்பினருக்கும் உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும், உற்பத்தியும் ஏற்றுமதியும் பெருகும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.