Categories
மாநில செய்திகள்

நிர்வாகிகள் அதிரடி பணிநீக்கம்….ஃபாக்ஸ்கான் நிறுவனம் எடுத்த பரபரப்பு முடிவு…!!

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையின் நிர்வாகிகளை மாற்றியமைக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் விடுதியில் தங்கி பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்று இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நிறுவனம் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தரமற்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதை கண்காணிக்கத் தவறிய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகளை பணியமர்த்த இருப்பதாக ஃபாக்ஸ்கான் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Categories

Tech |