லண்டனில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக ஓடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் தற்போது புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி அன்று இளைஞர் ஒருவர் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அருகில் உள்ள நடைபாதையில் நிர்வாணமாக ஓடிச் சென்றுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்நிலையில் லண்டன் நடைபாதையில் ஓடிய அந்த நபரை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். ஆனால் அந்த நபர் அதற்குள் அங்கிருந்து சென்றுவிட்டார். மேலும் இதனை கேத்தரின் என்ற 22 வயதுள்ள பெண் நேரில் பார்த்துள்ளார். அவர் தனியார் செய்தி ஊடகம் ஒன்றில் இது பற்றி கூறியுள்ளதாவது, ப்ளூம்ஸ்பரி ஸ்கொயர் என்ற கார்டனுக்கு அந்த நபர் விரைந்து சென்று கொண்டிருந்தார். அதன்பிறகு பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை கடந்து சென்றபோது திரும்பி சுற்றி முற்றி பார்த்தார்.
அதன் பின் மறுபடியும் நடக்க தொடங்கினார். அந்த நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் அந்த நபரை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். அதில் ஒருவர் அந்த நபரிடம் ஆடைகள் எங்கே? என்று கேட்டார். அதற்கு அவர் “என்னை கழுவபோகிறேன் அதற்காக தான் உடையை கழற்றிவிட்டேன்” என்று பதிலளித்ததாக கூறியுள்ளார். மேலும் நடைபாதையில் நிர்வாணமாக சென்றதால் காவல்துறையினர் அந்த இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.