தமிழில் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தொழிலதிபர் ஆவார். இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா ஆபாச படங்களை தயாரித்த வழக்கில் மும்பை காவல்துறையினர் நேற்றிரவு அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் ராஜ் குந்த்ரா தன்னை நிர்வாணமாக நடித்த சொன்னதாக நடிகை ஷகாரிகா சோனா புகார் அளித்துள்ளார். வெப்சீரிஸ் வாய்ப்பை தனக்கு வழங்க இயக்குனர் உமேஷ் காமத் ஜூம் காலில் ஆடிஷன் செய்தார். அந்த ஆடிஷனில் உடன் இருந்த ராஜ் குந்த்ரா தன்னை நிர்வாணமாக நடிக்க கட்டாயப் படுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.