நாக்பூரில் ஒரு பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த 5 பேர் பணத்தாசை காட்டி நிர்வாணமாக நின்றால் 50 கோடி பணமழை கொட்டும் என்று கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த கணேஷ், தினேஷ் மகாதேவ், ராமகிருஷ்ணா, வினோத் ஜெயராம், சோபன் ஹரிபாபு என்ற 5 இளைஞர்கள் துணியே இல்லாமல் நிர்வாணமாக நின்று பூசை செய்தால் வானத்திலிருந்து 50 கோடி பணமழை கொட்டும் என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவ்வாறு பூஜையை வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்துளளார். இதையடுத்து அந்தப் பெண்ணை விடாமல் துரத்தி பணத்தாசை காமித்து மீண்டும் மீண்டும் தொல்லை செய்து உள்ளனர். இதனை பொறுக்க முடியாத அந்த பெண் அப்பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் அந்த ஐந்து இளைஞர்களையும் அழைத்து பிளாக் மெயில் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.