நாசிக் மாவட்டத்தில் நிர்வாணமாக பூஜை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி பெண்ணை ஏமாற்றிய சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாசிக் மாவட்டத்தில் ஒரு பெண்ணிடம் நிர்வாணமாக பூஜை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி அந்தப் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அவரது கணவன் துணையாக இருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சாமியார் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை கைது செய்துள்ளனர். சாமியாரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் கடந்த 7 மாதங்களாக அந்த பெண்ணை சித்திரவதை செய்துள்ளதாகவும், முதலில் அந்த பெண்ணின் கணவருக்கு ஆசை வார்த்தை கூறி பின்னர் அவர் மூலம் அவரது மனைவியை அழைத்து வந்து நிர்வாணமாக சில பரிகாரங்களை செய்யும்படி கூறியுள்ளனர்.
அப்படி செய்தால் உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர். சாமியாரின் பேச்சைக் கேட்டு அந்த பெண்ணும் நடந்து கொண்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இதே போன்று வேறு ஏதாவது பெண்கள் ஏமாந்து உள்ளார்களா? வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.