Categories
இந்திய சினிமா சினிமா

நிர்வாணமாக போட்டோ ஷூட்…… பிரபல நடிகரை நெருங்கும் போலீஸ்….!!!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்வீர் சிங். இவர் பிரபல நடிகை தீபிகா படுகோனே-வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் ரன்வீர் சிங்க் பேப்பர் பத்திரிக்கை ஒன்றுக்காக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அவரது நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தன.

இந்நிலையில், ரன்வீர் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 509, 292 மற்றும் 294 மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 ஏ ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும், பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி ரன்வீர்சிங்கிற்கு சம்மன் அனுப்ப மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது.

Categories

Tech |