Categories
தேசிய செய்திகள்

நிர்வாணமாக வீடியோ எடுத்து…. வயலில் வேலை செய்த பெண் கூட்டு பலாத்காரம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள நூஹ் என்ற பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த ஜூலை 27ஆம் தேதி வயலுக்குச் சென்றுள்ளார்.அப்போது அந்த வழியாக காரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை வழி கேட்பது போல பேச்சு கொடுத்து உடனே கடத்திச் சென்றனர்.அதன் பிறகு ராஜஸ்தான் மாநிலத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணை வன்கொடுமை செய்து நிர்வாணமாக வீடியோ எடுத்து பெண்ணின் பெற்றோருக்கு அனுப்பி மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால் பெண்ணை விட்டு விடுவதாகவும் இல்லை என்றால் சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் எனவும் கூறி அவரை மிரட்டி உள்ளனர். அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே செப்டம்பர் 1ஆம் தேதி மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து அந்த பெண்ணை மீட்டனர்.இதனைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |