பிரபல நடிகை நிகிதா நிர்வாண படங்கள் கோவிலில் இருக்கும் சிற்பக்கலை போன்றது என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மராத்தி நடிகை நிகிதா கோகலே நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி வந்துள்ளார். அதனால் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த அவர், கோபத்தில் கோவில்களில் இருக்கும் சிற்பங்கள் போன்றதுதான் நிர்வாண கலை. பைத்தியக்காரத்தனமான புகைப்படங்களை அனுமதிக்கும் சமூக வலைத்தளம், கலைநயமிக்க புகைப்படங்களை வெளியிட மறுப்பது வியப்பாக உள்ளது. ஆபாசத்திற்கு நிர்வாணத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் செயல்படுகின்றன என தெரிவித்துள்ளார். இவர் கூறியுள்ள இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.