Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிர்வாண படம், வீடியோ… பிரபல இயக்குனர் மனைவியால் சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் பிரபல இயக்குனர் மனைவி பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு, சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு மத்தியில் சில பெண்கள் அத்துமீறி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் பாலியல்தொழில் நடந்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு இளம்பெண்கள் மற்றும் நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த இயக்குனர் ஒருவரின் மனைவி காந்திமதி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சினிமாவில் நடிக்க ஆசைப்படும் இளம்பெண்கள் மற்றும் மாடல் அழகிகளை நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தொழிலதிபர்களுக்கு பேரம் பேசி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |