Categories
சினிமா தமிழ் சினிமா

நிர்வாண புகைப்படத்தை லீக் பண்ணது அவங்கதான்!…. நடிகர் விஷ்ணு விஷால் திடீர் விளக்கம்…..!!!!

டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு முன்பே முடிவடைந்த நிலையில், இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இந்த வருடம் டிரெண்டான நிலையில், உடனே நடிகர் விஷ்ணு விஷாலின் நிர்வாண புகைப்படம் வெளியாகி கோலிவுட்டையே கதிகலங்க செய்தது. இதற்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் புகைப்படங்கள் குறித்து அவர் “கட்டா குஸ்தி” புரோமோஷனில் விளக்கமளித்து இருக்கிறார். அவற்றில், இந்த போட்டோவை நான் 2 ஆண்டுக்கு முன்பு எடுத்தேன். எனினும் வெளியிட விரும்பவில்லை. ரன்வீர் சிங் போட்டோ டிரெண்டான சூழ்நிலையில், பொண்ணுங்க போடுறாங்க, ரன்வீர் சிங் போடுறாரு, நீ போட்டா என்ன என கூறி என் மனைவி ஜுவாலா கட்டா தான் அந்த போட்டோக்களை இணையத்தில் லீக் பண்ணிட்டா என விளக்கம் கொடுத்துள்ளார்.

Categories

Tech |