சமீபத்தில் ஒரு பத்திரிகையின் அட்டைப்படத்துக்கு பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்த காட்சி பிரபலமானது. இப்போது ரண்வீர் வழியில் தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷாலும் நிர்வாண படத்துக்கு போஸ் கொடுத்து அதை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். சரி…. நானும் டிரெண்டில் இணைகிறேன்.
பின்குறிப்பு: புகைப்பட கலைஞர் எனது மனைவியாக இருக்கும்போது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது எல்லாம் ஆபாசத்தின் உச்சம் என்றும் சிலர் இதை தயவு செய்து நீக்கி விடுங்கள் என்றும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ஒரு சிலர் விஷ்ணு விஷாலின் புதிய முயற்சியை பாராட்டி கருத்து வெளியிட்டுள்ளனர்.