Categories
தேசிய செய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசை படகில் தீ விபத்து…. என்ன காரணமா இருக்கும்?…. பரபரப்பு….!!!

கேரள மாநிலம் கொச்சி முனம்பம் துறைமுகத்தில் படகு இறங்கு தளத்தில் தமிழக மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த மீனவர்களின் விசை படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதால் தங்களது படகுகளில் சாப்பிட தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று சமைத்து சாப்பிடுவர்.

இந்நிலையில் ஒரு படகில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது. இதனால்  தீ விபத்து ஏற்பட்டு  பக்கத்தில் இருந்த படகுகளில் பிடித்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் படகுகளில் இருந்து குதித்து தப்பி ஓடினர். எனவே உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தில் 2 படகுகள் முற்றிலுமாக எரிந்து விட்டது. மேலும் ஒரு படகு லேசான சேதம் அடைந்துள்ளது.

Categories

Tech |