வங்கிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் ஸ்ரீராம் நகரில் நேரு என்பவர் வசித்து வருகிறார். இவர் கொள்ளிடம் பேருந்துநிலையம் அருகே உள்ள கும்பகோணம் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்ற நேரு வங்கி வாசலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
அதன் பின் மதிய உணவு இடைவேளையின் போது வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நேரு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.