தமிழகத்தில் விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
நாதக கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஊரக உள்ளாட்சி அளவில் விவசாயிகளுக்கு எந்த மாதிரியான மாற்றத்தை கொண்டுவர முடியும்? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சீமான், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 100 நாள் வேலை திட்டத்தில் 100 ரூபாய்,200 ரூபாய் கூட கொடுங்கள். ஆனால் எங்கள் வீட்டு தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு நாங்கள் 500 ரூபாய் கொடுக்கிறோம்.
அது அவர்களுக்கு போதாது என்றால் அந்த 200 ரூபயை அவர்களுக்கு ஊக்கத் தொகையாக அரசு கொடுக்கலாம். விவசாயம் பார்ப்பதற்கே ஆள் இல்லாத பொழுது, வேளாண்மைக்கு மட்டும் எதற்கு தனி நிதிநிலை அறிக்கை? அதனால் என்ன பயன்? அது வெறும் ஏமாற்று வேலை தான். இந்த 100 நாள் வேலைத் திட்டத்தால் எந்த ஒரு பயனும் கிடையாது. வேலை செய்யபவர்கள் ஆங்காங்கே கூடி விளையாடுவது, பூரணி பேசுவது தான் இருக்கிறது. இதற்கு தண்டமாக ஒரு சம்பளம். விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டு 100 நாள் வேலைக்கு ஆள் தேடினால் தினமும் சாப்பிட அரிசி எங்கிருந்து கிடைக்கும்? என்று கடுமையாக பேசியுள்ளார்.