ரயில் மோதி 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் இருந்து திண்டுக்கல் நோக்கி மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மொட்டணம்பட்டி ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் இரண்டு மாடுகள் நின்று கொண்டிருந்தது.
இதனை பார்த்ததும் என்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்த முயற்சி செய்தபோதும் 2 மாடுகளும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.