தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக பல்வேறு அமைப்புகளிடம் மூன்று நாட்களில் அனுமதி பெறும் வகையில் ஒற்றை சாளர முறையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை அதிகாரி கூறியபோது, மத்திய அரசு தொழிலகங்கள் தொடங்குவதை சுலபமாக பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக 2018 உலக வங்கியின்சுலபமாக தொழில் துவங்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா, 23 புள்ளிகள் முன்னேறி, 77வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வகையில், இரு ஆண்டுகளில், இந்தியா, 53 இடங்கள் முன்னேறிஉள்ளது. இந்நிலையில், உலக வங்கியின் சுலபமாக தொழில் புரியும், ‘டாப் 50’ நாடுகளின் பட்டியலில் நுழைய, இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கான அனைத்து அனுமதிகளும் ஒற்றை சாளர முறையில் பெறுவதற்கான, முதலீடுகளுக்கு ஏற்ப கட்டண விவரங்களை தமிழக அரசு வெளியீட்டுள்ளது. ஒரு நிறுவனம் ரூ.10 கோடி மதிப்பு வரையில் விரிவாக்கம் செய்ய கட்டணம் எதுவுமில்லை. ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை விரிவாக்கத்திற்கு ரூபாய் இரண்டரை லட்சம், ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி விரிவாக்கத்திற்கு ரூ.5 லட்சம் கட்டணம், ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் விரிவாக்கம் செய்தல் ரூ.20 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.