நடிகை பிபாஷா பாசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பிபாஷா பாசு இந்தி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். பல திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியும் உள்ளார். இவர் படங்கள் மட்டுமல்லாமல் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார்.
பல காதல் ஏற்பட்டு முறிந்த நிலையில் கரண் சிங் குரோவருடன் காதலில் விழுந்த நிலையில் 2016 ஆம் வருடம் அவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது அவர் கர்ப்பமாக உள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவருக்கு நேற்று முன்தினம் வளைகாப்பு நடந்தது. அதன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்திருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.