நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது, “கடந்த ஆட்சியில் அதிமுக அரசு தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது.
எனவே நாம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மக்களிடம் வாக்கு கேட்கலாம். நீட் தேர்வு என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே காங்கிரசும் திமுகவும் தான். அதிமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திறந்து வைப்பது தான் திமுகவின் 8 மாத கால சாதனை ஆகும். வாய் ஜாலம் செய்து ஆட்சியை பிடித்து விட்டார் ஸ்டாலின். சட்டமன்ற தேர்தலின் போது 575 வாக்குறுதிகள் கொடுத்து விட்டு தற்போது வரை ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை முதலமைச்சர் ஸ்டாலின்.” இவ்வாறு அவர் கூறினார்.