Categories
தேசிய செய்திகள்

நிறைய தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு… தற்கொலைக்கு முயன்ற மிஸ்டர் இந்தியா… தொடரும் சிகிச்சை..!!!

மிஸ்டர் இந்தியா பட்டத்தை பெற்ற ஆணழகன், மனோஜ் பாட்டில் ஓசிராவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்திய பாடி பில்டர்ஸ் பெடரேஷனின் மிஸ்டர் இந்தியா பட்டத்தை 2016ஆம் ஆண்டில் வென்றவர். 29 வயதான பாட்டீல் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உள்ளார். இந்நிலையில் மயக்கமான பாட்டிலை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து பாட்டிலின் உடல்நிலை குறித்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவர் அவர் சுயநினைவு பெற்று நலமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் என்ன உட்கொண்டார் என்பதை கண்டறிய அவரது உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்படுள்ளது. பாட்டிலின் உடல்நிலை குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளதாக மருத்துவர்கள்தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் மனோஜ் பாட்டீல், நடிகர் சாஹில்  மீது காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |