இளம் வயதில் ஓடியாடி வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம். ஆனால் கடைசி காலத்தில் தங்களுடைய கையில் பணம் இருந்தால் மட்டுமே தனக்கு உதவும். பிள்ளைகள் கூட உதவுவார்கள் என்று நிச்சயம் கூற முடியாது. எனவே தங்களின் கடைசி காலத்திற்கான தேவையான பணத்தை இப்போதிலிருந்தே சேமிக்க தொடங்க வேண்டும். அதற்கு நல்ல பென்ஷன் திட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் இப்போதிலிருந்தே முதலீடு செய்யலாம். அந்த வகையில்SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் நீண்டகால கார்பஸை உருவாக்கும் இது ஒரு சிறந்த முதலீடு ஆகும்.
முதலில் உங்களுடைய எதிர்காலத் தேவைக்காக முதலீடு செய்ய நினைத்தால் உங்களுடைய மாதாந்திர தேவைகளை பூர்த்தி செய்ய ஓய்வூதியத்தில் உங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை முதலில் தீர்மானம் செய்ய வேண்டும். இந்த பென்சன் ஃபண்டானது கடந்த 5 வருடங்களாக 10.25% சராசரி ஆண்டு வருமானத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு அளித்து வந்துள்ளது.
இந்த திட்டம் பிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இது ஒரு திறந்தநிலை நடுத்தர அளவு ஃபண்டாகும். இந்த நிதியின் கீழ் சொத்து மதிப்பானது (AUM) ரூ.447.94 கோடியாக உள்ளது. ஏப்ரல் 20, 2022 அன்று இந்த ஃபண்ட் ஹவுஸால் அறிவிக்கப்பட்ட நிகர சொத்து மதிப்பானது (NAV) ரூ.169.3626 ஆக உள்ளது. சந்தை அபாயங்களின் அடைப்படையில் இந்த ஃபண்டானது அதிக ரிஸ்க் உடைய ஃபண்டாக உள்ளது.
இதன் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையானது சிப் (SIP) மற்றும் லம்ப்சம் முறையில் ரூ.500 ஆகும். இதன் லாக்-இன் காலமானது 5 ஆண்டுகளாகும். இந்த ஃபண்டில் 58 வயத்துக்குள் மாற்றி அமைக்கும் வசதியும் உண்டு. இதன் சாராசரி வருட வருமானமானது சிப் முதலீட்டில் முதல் ஆண்டு 2.75% உயர்வும், இரண்டாம் ஆண்டு 8.78%, மூன்றாம் ஆண்டு 8.89%, நான்காம் ஆண்டு 8.90% மற்றும் ஐந்தாம் ஆண்டு 8.22% ஆகவும் உள்ளது.
அதே லம்ப்சம் முறையில் முதலீடு செய்தால் இந்த ஃபண்டின் சாராசரி ஆண்டு வருமானமானது முதல் ஆண்டு 7.52% உயர்வும், இரண்டாம் ஆண்டு 12.87%, மூன்றாம் ஆண்டு 8.42%, நான்காம் ஆண்டு 7.80% மற்றும் ஐந்தாம் ஆண்டு 10.25% ஆகவும் உள்ளது.