பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக அதிக பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் நேற்றுடன் நிறைவு பெற்றது இந்த போட்டியில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 19 பதக்கங்களுடன் இந்தியா சாதனை படைத்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக அதிக பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. அதன்படி பதக்கப்பட்டியலில் 207 பதக்கங்களுடன் சீனா முதலிடமும், 19 பதக்கங்களுடன் இந்தியா 24வது இடமும் பெற்றுள்ளன. தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற 19 வயது துப்பாக்கி சுடும் ஆவணி லேகாரா, விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவின்போது இந்திய அணிக்கு தலைமை தாங்கினார்.