Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நிறைவேறிய காஜல் அகர்வால் தங்கையின் சுயநல ஆசை…!!!

காஜல் அகர்வால் சகோதரியின் சுயநல ஆசை நிறைவேறியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவரின் தங்கை நிஷாவும் நடிகை ஆனார். ஆனால் இவர் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். நிஷாவிற்கு பிறகுதான் காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கின்றார்.

காஜல் கர்ப்பமாக இருப்பது குறித்து நிஷா முன்னதாக கூறியிருப்பதாவது காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும். என் மகனும் வளர்ந்து வருகிறான். காஜல் அகர்வாலுக்கும் விரைவில் திருமணம் நடந்து குழந்தை பிறக்க வேண்டும். அப்போதுதான் என் குழந்தையும் காஜலின் குழந்தையும் ஒன்றாக வளர்வார்கள். வயது வித்தியாசம் இருந்தால் ஒன்றாக இருக்க மாட்டார்கள். எனவே காஜலுக்கு விரைவில் குழந்தை பிறக்க வேண்டும் என்பது எனது சுயநல ஆசையே என்று கூறியிருந்தார். இந்நிலையில் நிஷா அகர்வாலின் ஆசை நிறைவேறி உள்ளது.

Categories

Tech |