சைக்கிள் மீது இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள குப்பிச்சி பாளையம் பகுதியில் மாரியப்பன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார் கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு சைக்கிளில் பொய்யேரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் திடீரென சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.
இந்த கோரவிபத்தில் பலத்தகாயமடைந்த மாரியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.