பேருந்து மீது கல் வீசிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சங்கரன்கோவில் வழியாக தேனி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பெரும்பத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது லாரி ஓட்டுநரான ராமசுப்பு என்பவர் பேருந்தை கைகாட்டி நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராமசுப்பு கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தை நோக்கி வீசியதால் பேருந்து சேதமடைந்தது. இதுகுறித்து ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமசுப்புவைகைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.