திருப்பூரில் இருந்து அரசு பேருந்து நேற்று முன்தினம் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மதுராபுரியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தாமரைக்குளம் கல்லூரி விலக்கு பேருந்து நிலையத்தில் வைத்து சிலர் பேருந்தை வழிமறித்தனர். ஆனால் பேருந்து நிற்காமல் சென்றதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த வாலிபர்கள் பேருந்தின் கண்ணாடி மீது கற்களை தூக்கி வீசினர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விக்னேஷ், நந்தா, ரோகித், வசந்த், சிவா, மகேஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.