Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற வாகனம்…. உயிருக்கு போராடிய காவலர்…. வள்ளியூரில் கோர விபத்து….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதியில் செந்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சீதபற்பநல்லூர் காவல்நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் வள்ளியூர் நான்கு வழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென செந்தில் முருகன் மீது மோதிவிட்டு வேகமாக சென்றுள்ளது.

இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் செந்தில் முருகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |