Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கில் போட திகார் ஜெயில் தீவிரம் காட்டி வருகிறது …!!

நிர்பயா  பலாத்கார வழக்கில் குற்றம் செய்யப் பட்ட 4போரையும் திகார் ஜெயிலில் தூக்கில் போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

 

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் வைத்து மாணவி நிர்பயா  6பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ்  ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.  இவர்களுக்கு மரண தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

 

குற்றவாளி வினய் சர்மாவுக்கு கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது .மற்ற 3 பேரும் கருணை மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் நான்கு பேரையும் தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திகார் ஜெயிலில் உள்ள குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 16ம் தேதி தூக்கிலிட சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது .

Categories

Tech |