Categories
தேசிய செய்திகள்

நிலக்கரி கையிருப்பு: வெறும் 8 நாட்கள் மட்டுமே இருக்கு…. ராகுல் காந்தி…..!!!!!

8 வருடங்களாக பேசிய பேச்சுக்கள், 8 நாள்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். நாடு முழுதும் பல மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோல் இந்திய நிறுவனத்திற்கும், இந்திய ரயில்வேதுறைக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தவிா்த்து, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 8 நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு எனும் நிலைமைக்கு இந்தியாவை கொண்டுவந்து மத்திய அரசு நிறுத்தியுள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அவர் கூறியதாவது “8 வருடங்களாக பேசிய பேச்சுக்கள், 8 நாள்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. நம் நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின் வெட்டு காரணமாக சிறு தொழில்கள் நசுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இது மேலும் வேலையிழப்புக்கு வழிவகுக்கும். ஆகவே பிரதமர் மோடி அவர்களே வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்தி விட்டு மின் உற்பத்தி நிலையங்களை திறக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |