Categories
தேசிய செய்திகள்

நிலக்கரி பற்றாக்குறை….. நாடு முழுவதும் மின்தடை ஏற்பட வாய்ப்பு… அதிர்ச்சி தகவல்…..!!!!

மின் தேவை தற்போது அதிகரித்து வருவதால் நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாலும் கோடைகாலங்களில் மின் தடைகள் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் நிலக்கரி மிகவும் முக்கியமான படிமமாக எரி பொருளாக உள்ளது. இந்தியாவின் ஒட்டு மொத்த மின்சார உற்பத்தியில் அனல் மின் சக்தியின் பங்கு 75 சதவீதமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் முதன்மையான எரிசக்தி நுகர்வு 7 சதவீதமாக அதிகரித்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் கோடை காலத்திற்கு முந்தைய அளவை தற்போது இருக்கும் பயன்பாட்டு நிலக்கரியின் அளவு குறைவாக உள்ளதாக ரியட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மின்தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

நிலக்கரி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட அமைப்பால் 106 நிலக்கரி வளாகங்கள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், நிலக்கரி சுரங்க ஏலத்தின் மூலம் 47 பேருக்கு சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த, வளாகங்களில் இருந்து 2021-22-ம் ஆண்டில் 85 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 12ம் தேதி இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான ஆலைகளின் செயல்பாடுகளை மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார்.

வேகமாக அதிகரித்து வரும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு, அனைத்து மின் உற்பத்தி நிறுவனங்களும் 10% வரை நிலக்கரி கலப்பிற்க்காக அதனை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சில மாநிலங்களில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களின் நீண்ட தூர நிலக்கரிப் போக்குவரத்தைத் தவிர்ப்பதற்காக, இணைப்பு நிலக்கரியில்  25 சதவிகிதம் வரை சுங்கச்சாவடி வசதி அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |