Categories
தேசிய செய்திகள்

நிலக்கரி பிரச்சனையை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்…. உற்பத்தி அதிகரிப்பு…. மத்திய மந்திரி தகவல்…!!!

மின்சார உற்பத்திக்கு தேவையைவிட அதிகமாகவே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய நிலக்கரித் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மத்திய நிலக்கரித் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தியை பார்வையிடுவதற்காக சென்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அந்த பேட்டியில் கூறியதாவது, இந்தியாவில் நிலக்கரி பிரச்சனை குறித்து தொடர் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. நிலக்கரி பிரச்சனை குறித்து அரசியல் செய்ய தான் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

மேலும் மின்சார உற்பத்திக்கு இன்றைய நிலவரப்படி 16 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் நாங்கள் 20 லட்சம் டன் நிலக்கரி விநியோகித்து வருகிறோம் என கூறினார். மேலும் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என கூறிய அவர் அனல் மின் நிலையங்களில் ஒருநாளைக்கு 19 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.20 ம் தேதிக்குப் பிறகு நாளொன்றுக்கு 20 லட்சம் டன் நிலக்கரி வினியோகம் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

Categories

Tech |