Categories
தேசிய செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி பெண் பலி…..! 5 பேர் படுகாயம்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த நிலையில், ஐந்து பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார். அவர்களுடன் பயணித்த மேலும் 5 பேர் காயமடைந்தனர். ருத்ரபிரயாக்-கௌரிகுண்ட் தேசிய நெடுஞ்சாலையில் சோன்பிரயாக் அருகே மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் தெரிவித்தார்.

விபத்தின் போது வாகனத்தில் 11 பேர் இருந்ததாகவும். அவர்கள் கேதர்நாத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. சோன்பிரயாக்-கௌரிகுண்ட் ஷட்டில் சர்வீஸில் ஈடுபட்டிருந்த வாகனம், முன்காட்டியாவுக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நிலச்சரிவில் சிக்கியது. பாறைகள் உருண்டு விழுந்ததில், இடிபாடுகளுக்குள் வாகனம் சிக்கி அப்பளமாக நொறுங்கியது. இதில் மகாராஷ்டிராவின் அகமது நகரை சேர்ந்த 62 வயதான புஷ்பா மோகன் போன்ஸ்லே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினார். உத்தரகாண்ட் மாநிலத்தில் புதன்கிழமை பெய்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |