ஆந்திராவில் நில தகராறு காரணமாக இரு தரப்பினர் கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் கர்னுள் மாவட்டம் அனுமாபுரம் பகுதியில் ஒய் ஆர் எஸ் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பாலநாகிரெட்டியின் ஆதரவாளர்களுக்கும், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ திக்க ரெட்டியின் ஆதரவாளர்களுக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நில பிரச்சினை தொடர்பாக இரு பிரிவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மோதல் முத்தியதால் இரு தரப்பினரும் உருட்டு கட்டைகள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். சினிமாவை மிஞ்சிய இச்சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை களைத்தனர். இது தொடர்பாக 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.