நிலத்தடி நீருக்கு ரூபாய் பத்தாயிரம் கட்டணம் என்று மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு கூறியுள்ளது.
நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கும், அன்றாட மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவை கணக்கிட்டு கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு மத்திய அரசு தண்ணீர் கொள்கை 2012 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதில் வீடுகள் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட நிலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் ஜல் சக்தி துறையில் இணைய மூலமாக ரூபாய் 10,000 கட்டணம் செலுத்தி தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் நிலத்தடி நீருக்கு பத்தாயிரம் கட்டணம் என்கின்ற மத்திய நிலத்தடி நீர் ஆதார ஆணையத்தின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது. நிலத்தடி நீர் பாதுகாப்பு, நீர் எடுத்தல் தொடர்பாக தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் தவிர, மற்ற எந்த விதிகளும் தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.