விவசாயி கொலை செய்த வழக்கில் 5 வருடங்களுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூரை சேர்ந்தவர்கள் கோபால்(60) மற்றும் முனியப்பன்(48). இவர்கள் இருவருமே உறவினர்கள். இவர்களுக்கிடையே கடந்த ஜனவரி 2015 ஆண்டில் நிலப் பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அதில் முனியப்பன் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவரும் சேர்ந்து விவசாயி கோபாலன் கட்டையால் அடித்து கொலை செய்ய முயன்றனர்.அதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்பு கோபாலன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அனால், சிகிச்சை பலனின்றி கோபாலன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து முனியப்பன் மற்றும் சங்கீதாவை கலசபாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு வெகு காலமாக நடந்து வந்த நிலையில் நேற்று(பிப் 25) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள் கொலை செய்த முனியப்பனுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்தார். பிறகு முனியப்பன் மனைவி சங்கீதாவை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்தனர்.