இரு தரப்பினர் மோதி கொண்டதில் 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிலிகுண்டு கிராமத்தில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உறவினரான கிருஷ்ணன் என்பவருக்கும் நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரச்சனைக்குரிய நிலத்தில் மணிவண்ணனின் தந்தை கண்ணன் குடிசை அமைத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதனால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார்களின் பேரில் மணிவண்ணன், கிருஷ்ணன், சக்திவேல், கண்ணன், ரமேஷ் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.