நீதிமன்ற உத்தரவின்படி அரசுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூகை புழையான் கொல்லை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தில் தனிநபர் ஒருவர் கட்டிடம் கட்டி சிமெண்ட் கல் அமைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கரம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் தலைமையில் அதிகாரிகள் காவல்துறையினரின்பாதுகாப்புடன் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்றினர்.