தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் பட்டங்காடு காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோயிலுக்கு எதிரே இருக்கும் இடத்தில் தென்னங்கன்று நடுவதற்காக டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தனர். அப்போது தென்பட்ட நடராஜர் சிலையை வெளியே எடுத்ததால் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனையடுத்து பொதுமக்கள் அப்பகுதியில் இருக்கும் சிவ பாக்கிய விநாயகர் கோவில் முன்பு 52 கிலோ எடையும் 2 1/2 அடி உயரமும் உடைய ஐம்பொன் நடராஜர் சிலையை வைத்து மாலை அணிவித்து பூஜைகள் செய்து பஜனை பாடி வழிபடுகின்றனர். இதுகுறித்து அறிந்த சிவகிரி தாசில்தார் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் சரவணன், ராமநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராமலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை ஆய்வு செய்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories