நிலநடுக்கம் வந்தபோதும் வீடியோ காலில் மாணவர்களுடன் ராகுல் உரையாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நிலநடுக்கத்தையும் கூட பொருட்படுத்தாமல் காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மாணவர்களுடன் உரையாடும் காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களோடு காங்கிரஸின் மூத்த தலைவரான ராகுல் காந்தி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக உரையாற்றியுள்ளார்.
அப்போது டெல்லியில் தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ராகுல் காந்தி அதை பொருட்படுத்தாமல் மாணவர்களோடு எப்போதும்போல் எதார்த்தமாக உரையாடிக் கொண்டு இருந்துள்ளார். நிலநடுக்கம் வந்த போதும் அவர்களோடு உரையாடிய ராகுல் காந்தியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#earthquake @RahulGandhi in between in a live interview when earthquake happened.#earthquake pic.twitter.com/GRp9sxHoMY
— Rohit (@RohitnVicky) February 12, 2021