Categories
உலக செய்திகள்

நிலப்பரப்பில் திடீரென ஏற்பட்ட சூறாவளி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!

கடற்கரை பகுதியில் திடீரென ஏற்பட்ட சூறாவளி தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கனடா நாட்டிலுள்ள சஸ்காட்சுவான் பகுதியில் ஒரு கடற்கரை அமைந்துள்ளது. இங்கு கடந்த வாரம் வானிலை மாற்றத்தின் காரணமாக சூறாவளி ஏற்பட்டுள்ளது. அந்த சூறாவளி ஆனது பார்ப்பதற்கு ஒரு குறுகிய கயிறு வடிவத்தில் புனல் போன்று காட்சி அளிக்கிறது. இந்த சூறாவளி ஆனது நிலப்பரப்பில் தோன்றியுள்ளது. இந்த சூறாவளியை கடற்கரையில் நின்ற சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோவை டாக்லஸ் தாமஸ் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து கனடா நாட்டில் சமீபத்தில் விவசாய நிலத்தில் நீடித்த சூழலில் மேலோட்டமாக இடி இடித்து மழை பெய்துள்ளது. இந்த மழையை சூப்பர் செல் என அழைக்கின்றனர். இந்த மழை பெய்யும் அழகான காட்சியை ஒரு பெண்மணி வீடியோவாக எடுத்து தன்னுடைய டுவிட்டர்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |