Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலப்பிரச்சனையால் முன்விரோதம்….. பா.ஜ கட்சியின் பிரமுகர் கொலை…. சிவகங்கையில் பரபரப்பு…!!

பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரை கிராமத்தில் கதிரவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேவகோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கின்றார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தருண் என்ற மகள் இருக்கிறார்.  இந்நிலையில் கதிரவனுக்கும், பெரியசாமி என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் காவன்வயல் விலக்கு அருகில் இருக்கும் சாலையோர பஜ்ஜி கடை முன்பு கதிரவன் அமர்ந்திருந்த போது மோட்டார்சைக்கிளில் பெரியசாமி அங்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து பெரியசாமியும் அதே பகுதியில் வசிக்கும் வீரபாண்டி என்பவரும் இணைந்து கதிரவனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கதிரவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கதிரவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |