நிலப் பிரச்சனை காரணமாக திருச்சி வாலிபரை அரிவாளால் வெட்டிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகில் ராப்பூசலையில் வசித்து வருபவர் முருகேசன் (37). இவருக்கும் அதே பகுதியில் உள்ள கோவிந்தராஜன்(55) என்பவருக்கும், நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று கோவிந்தராஜன் உட்பட 8 பேர் சேர்ந்து முருகேசனிடம் வாக்குவாதம் பண்ணினார்கள்.
அப்போது முருகேசனின் மைத்துனரான திருச்சி ஏர்போர்ட்டில் வசித்துவந்த செந்தமிழ்(35) என்பவர் தடுக்க முயன்ற போது அவரை கோவிந்தராஜன் உள்பட 8 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டினார்கள். இதில் படுகாயமடைந்த அவரை இலுப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து கோவிந்தராஜன், பவுன்ராஜ், மதி கண்ணன், விஜய், நட்ராஜன், ராஜேந்திரன், சுரேஷ், ரெங்கராஜ் ஆகிய 8 பேர் மீது இழுப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.