Categories
உலக செய்திகள்

“நிலப் பகுதிகளுக்கு பொருளாதார தடை”…. பிரபல நாட்டு அதிபர் அதிரடி முடிவு ….!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனில் உள்ள ரஷ்யா சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது.இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் எல்லைக்குள் குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களிடம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாநிலங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பை விடுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனில் உள்ள ரஷ்யா சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் உக்ரேனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப் பாட்டை குறைவாக மதிப்பிடுவது போன்ற ரஷ்ய முயற்சிகள் தொடர்பாக சில நபர்களின் சொத்துக்களை தடுப்பது மற்றும் சில பரிவர்த்தனைகளைத் தடை செய்தல் என்று நிறைவேற்று அறிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

இதனைத் தொடர்ந்து உக்ரேனின் நிதியுதவி மீதும் இரண்டு ரஷ்ய ஆதரவு பிராந்தியங்கள் வர்த்தகம் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக வெள்ளை மாளிகை பத்திரிக்கையாளர் ஜென்சாகி கூறுகையில். “உக்ரைனில் உள்ள பகுதிகளில் செயல்பட தீர்மானிக்கப்படும் எந்த ஒரு நபருக்கும் பொருளாதார தடை விதிக்கும்  அதிகாரத்தை வழங்கும். மேலும் உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில் அதிபர் புதின் டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாநிலங்களை ‘சுதந்திரமானவை’  என்று அங்கீகரிக்கும் முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ஜே பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |