Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள்”…. பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!!!

நம்பியூர் அருகே நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் அருகே இருக்கும் கரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓணான்கரடு கிராமத்தில் பல வருடங்களாக ஒருவரின் நிலத்தை அங்குள்ளவர்கள் பாதையாக பயன்படுத்தி வந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் அந்த நிலத்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்து இருக்கின்றா.ர் நிலத்தை வாங்கியவர் சுற்றிலும் வேலி அமைத்ததால் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

இதனால் போலீசார் வருவாய் துறையினர் நேற்று அங்கு சென்று நில அளவீடு செய்யும் பணியில் ஈடுப்பட்டார்கள். இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற நிலையில் நிலத்தை அளவீடு செய்யக்கூடாது. பல வருடங்களாகவே நாங்கள் இதை வழி பாதையாக பயன்படுத்தி வருகின்றோம். ஆகையால் இந்த வழிப்பாதை அடைக்கக் கூடாது என கூறினார்கள்.

இதனால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது போலீசார் பொதுமக்களிடம் கூறியதாவது, நிலத்தை வாங்கியவர் வேலி அமைக்க சில நாட்களுக்கு முன்பாக நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில்தான் நிலம் அளவீடு செய்யப்படுகின்றது. நிலம் அளவீடு செய்யும் பணியை தடுத்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு இதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று மறு அளவீடு செய்து கொள்ளலாம் என கூறிய பின்னரே பொதுமக்கள் அதை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்யப்பட்டு கம்பி வேலி அமைக்கப்பட்டது.

Categories

Tech |