Categories
மாநில செய்திகள்

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்…. தமிழக அரசு அரசாணை…..!!

தமிழகத்தில் நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிலம் இல்லாத ஏழை களை கண்டறிந்து, அவர்களுக்கு நிலம் வழங்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கடிதம் மூலமாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக குழு அமைக்கவும் அறிவுறுத்தியது.

அதனைப் போலவே இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து நிலம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழு மூலமாக இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நிலம் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

Categories

Tech |